Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

உடைய ஜாகத்தில் கிரகங்கள் அமைந்து உள்ள ராசியில் மண்டலம் மிகவும் முக்கியான ஸ்தானம் 1,5,9 என்பது மூலத்திரிகோணமும், 1,4,7,10 கேந்திரம் ஸ்தானத்தில் கிரங்கள் அமைந்தால் மிக அதிக பலம் உடைய கிரகமாக கருதப்படுகிறது.

அப்படி பார்த்தால் பலர் உடைய ஜாதத்தில் மேஷத்தில் ஒரு கிரகமும், கடகத்தில் ஒரு கிரகமும், துலாம்யில் ஒரு கிரகமும், மகரத்தில்ஒரு கிரகமும்இருக்கும்,

அப்படி இருந்தும் அந்த கிரக திசை நடந்தாலும் பலன் இருக்காது ஏன், அது எப்படி அமைய வேண்டும் என்று பார்ப்போம். பொதுவாக மூலத்திரிகோணம் 1,5,9 ஸ்தானங்கள் உடைய அதிபராக சுபக்கிரகங்கள் அமைந்து அவர்களுடைய திசை நடந்தால் நல்லது. கேந்திரம் 1,4,7,10 ஸ்தானங்கள் உடைய அதிபராக அசுபக்கிரகங்கள் அமைந்து திசை நடப்பது நல்லது. மூலத்திரிகோணம் ராசியில் மிக சரியாக 120 டிகிரி வித்தியாசத்தில் கிரகங்கள் அமைந்து திசை நடந்தால் அவர்களுக்கு மிக நல்ல பெயரும், புகழ், பதவி, மேன்மை பெறுவார்கள்.

உதாரணமாக ரிஷப ராசியில்ரோகிணி நட்சத்திரம் 2-ம் பாதத்தில்ஒருகிரகமும், கன்னி ராசியில்அஸ்த நட்சத்திரம் 2-ம்பாதத்தில்ஒரு கிரகமும், மகர ராசியில் திருவோணம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில்ஒருகிரகமும், அமைய வேண்டும்.

அப்படி அமையாமல் ரிஷப ராசியில் கார்த்திகை நட்சத்திரம் 3-ம் பாதத்தில்ஒருகிரகமும், கன்னி ராசியில்அஸ்த நட்சத்திரம் 2-ம்பாதத்தில்ஒரு கிரகமும், மகர ராசியில் அவிட்டம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில்ஒருகிரகம் என்று இருந்தால் அது மூலத்திரிகோணயாக ஆகாது.

மேலும் மூலத்திரிகோணத்தில் மீனராசியில் சுக்கிரத்திற்கு அது உச்சவீடு, கடகராசியில் குருக்கு உச்சவீடு,விருச்சகம் ராசியில் சந்திரனுக்கு நீச்ச வீடாக உள்ளது.

அதே போல் கேந்திரஸ்தானத்திற்கு மிக சரியாக 90 டிகிரி வித்தியாசத்தில் கிரகங்கள் அமைந்து திசை நடந்தால் அவர்களுக்கு மிக நல்ல பெயரும், புகழ், பதவி, மேன்மை பெறுவார்கள். உதாரணமாக மேஷம்ராசியில் கார்த்திகை நட்சத்திரம்1-ம் பாதத்தில்ஒருகிரகமும், கடகம் ராசியில்ஆயில்யம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில்ஒரு கிரகமும், துலாம் ராசியில் விசாகம்நட்சத்திரம் 3-ம் பாதத்தில், மகரம் ராசியில் ஆவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் ஒரு கிரகமும், அமைய வேண்டும்.

அப்படி அமையாமல் மேஷம் ராசியில் பரணி நட்சத்திரம் 1-ம் பாதத்தில்ஒருகிரகமும், கடகம் ராசியில்புனர்பூசம் நட்சத்திரம் 2-ம்பாதத்தில்ஒரு கிரகமும், துலாம் ராசியில் விசாகம் நடச்திரம் 3-ம் பாதத்தில் ஒரு கிரகமும்,மகரம் ராசியில் உத்திராடம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில்ஒருகிரகம் என்று இருந்தால் அது கேந்திரம் ஆகாது.

இதில் மேலும் ஒரு முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால் மேஷ ராசியில் சூரியன் உச்சம், கடக ராசியி்ல் சந்திரன் ஆட்சி, துலா ராசியில் சனிஸ்வர் உச்சம்,மகர ராசியில் செவ்வாய்க்கு உச்சம் ஆகும்.

இதற்கு மாறா கிரகரங்கள் ராசி மாறி நீச்சகதி அடைந்தால் அவர்க்கு நடக்கும் திசையில் தவறாக வழியில் எல்லா சுக போகங்களும் அடைவார்கள்.

மேலும் நாம் படிக்கும் காலத்தில் கணக்கு பாடத்தில் ஒரே மூன்று சம அளவு உள்ள கோடு வரைந்தால் முக்கோணம் (அதுதான் முலத்திரிகோணம்) அதே போல் ஒரே நான்கு சம அளவு உள்ள கோடு வரைந்தால் அது சதுரம். (அதுதான் கேந்திரம்) அப்படி சம அளவு இல்லமல் வரும் மூன்று கோடுக்கு நீள முக்கோணம் என்றும்,நான்கு கோடுக்கு செவ்வகம் என்று சொல்வது உண்டு.இதற்கு விளக்க படம் கீழே தரப்பட்டு உள்ளது.

மூலத்திரிகோணமும், கேந்திரம்
மூலத்திரிகோணமும், கேந்திரம்
மூலத்திரிகோணமும், கேந்திரம்
மூலத்திரிகோணமும், கேந்திரம்
Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe: