Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

நீயா - நானா விஜய் டிவியின் 02/01/15 தேதியில் டாக்டர்க்கும் - ஜோதிடருக்கும் நடந்த விவாத மேடையில் டாக்டர்களின் கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்க முடியாத ஜோதிடருக்கும் மற்றும் டாக்டர்களுக்கும அதற்கான எனது பதில் :

ஜோதிட கலையை பொய் என்று கூறுவது நான் அதனை கடுமையாக கண்டிக்கிறேன்.ராகு-கேது கிரகம் இல்லை என்பதை நான் ஓப்பு கொள்கிறேன் அறிவியல் முறைபடி ஜோதிடம் கூற வேண்டும். ராகு-கேது என்பது ஓரு சாயகிரகம் அதாவது சாயகிரகம் என்றால் நிழல் கிரகம் என்றுபொருள்.

சூரியனின் ஓளி பூமி மீதும், சந்திரன் மீதும் படும்போது ஏற்படும் நிழல் தான் ராகு-கேது அதற்கு உதாரணம், சந்திர கிரணம், சூரிய கிரணம் சூரியன் மீது படும் நிழல் தான் ராகு, சந்திரன் மீது படும் நிழல் தான் கேது என்றார்கள் கடந்த 1500 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள். அதன் பின்னர்தான் ராகு-கேது என்ற கிரகங்கள் கணக்கில் சேர்க்கபட்டது.

1800 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிட சாஸ்த்திரத்தில் வராஹமிஹிரன் எழுதிய ஜாதகம் என்ற ஆதிகால நுல் ராகு-கேது கிரகங்கள் பற்றி குறிப்பிடவில்லை. கணக்கில் ஏழு கிரகங்களை வைத்து தான் ஜோதிட பலன்களை சொன்னார்கள். காரணம் அப்பொழுது வாழ்ந்தவர்கள் பாவங்கள் ஓன்றும் செய்யாமல் வாழ்ந்து வந்தனர். முன்னோர்கள் தான் கிரணத்தை கண்டு பிடித்தினார்.

வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் ஓரு குறளில் காலம் கருதி இருப்பர் காலங்காது ஞானம் கருதி வாழ்ப்பவர். குறள்

வள்ளுவர் குறிப்பிட்ட எழுதிய அதிகாரம் 133 = 7
குறளில் மொத்தம் 1330 = 7
அதில் உள்ள வாக்கிய = 7
வானவில் கலர் = 7
நாட்கள் = 7

திருமுலர் கூறிய ஓரு வார்த்தை நாள்ளும் கோள்ளும் என்னை ஓன்றும் செய்யாது என்றார்.

பழையகாலத்தில் ஏழு கிரகமட்டும் தான் கணக்கிட்டனர். ராகு,கேது நாம் செய்யும் பாவத்தையும்,குற்றத்தையும் பொருத்து தான் பலன் செய்யும்.

நம் முன்னோர்கள் தவறு,குற்றம்,பாவம் எதனையும் செய்ய பயபட்டார்கள். அதன் பிறகு வாழ்ந்த மனிதர் சுய நலம், பேராசை, பொறாமை.என்று பாவத்தில் வாழ்ந்துகொண்டு உள்ளனர்.

குறிப்பு : நெப்டியன் கிரகம் வான மண்டலத்தை ஓரு முறை சற்றி வலம் வர 120 வருடம், யூரேன்ஸ்க்கு,180 வருடம் ஆகும்.

மனிதனின் வாழும் காலம் குறைந்த காரணத்தினால் நெப்டியன், யூரோன்ஸ் என்ற கிரகங்கள் ஜோதிடசாஸ்திரத்தில் குறிப்பிட வில்லை.

ஜோதிடகணிக்கும் முறை தான் தவறாக இருக்கலாம் ஜோதிடகலை என்றும் உண்மை தான். ஓரு மனிதன் வாழும் ஓளி (ஜோதி) யாக பிரகாசிக்க வேண்டும்.

அதனால் தான் அதனை ஜோதிடம் என்று அழைக்கபட்டது.

Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe: